Ad Widget

கபே அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் பிரதேச செயலத்தில் நடமாடும் சேவை

Nadamadum-sevaiதேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே மற்றும் மனித உரிமைகள் நிலையம் ஆகியன இணைந்து ஆட்பதிவுத் திணைக்களத்தின் அணுசரனையுடன் அடையாள அட்டை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவையொன்றினை இன்று யாழ் பிரதேச செயலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நடமாடும் சேவையில் இது வரையில் 500க்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு புதிதாக அடையாள அட்டை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நடமாடும் சேவையில் மக்கள் தங்கள் சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் பொலிஸ் முறைப்பாட்டைப் பெறும் பிரிவு, பிறப்பத்தாட்சி பத்திரம் வழங்கல், புகைப்படம் எடுத்தல், சமாதான நீதவானின் உறுதிப்படுத்தல் போன்ற பல்வேறு சேவைகள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தங்கள் ஆவணங்களை தவறவிட்டவர்களுக்கு இவ்வாறான நடமாடும் சேவை ஒரு வரப்பிரசாதமாக அமையவுள்ளதுடன் இரண்டு மாதங்களுக்கு யாழ் மாவட்டத்தில் இந்த நடமாடும் சேவையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் நிலையத்தின் இணைப்பாளர் மயூரன் தெரிவித்தார்.

Related Posts