Ad Widget

கனடா, அமெரிக்காவில் பாரிய பனிப்புயல்! சிலர் உயிரிழப்பு!

நியுயோர்க்கின் மேற்கு பகுதியில் முன்னொருபோதும் இடம்பெறாத அளவு பனி பெய்த காரணத்தால் குறைந்தது 6-பேர்கள் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகார பூர்வமான குளிர்காலம் டிசம்பர் 21-ந் திகதி ஆரம்பமாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னராக பனிபுயல் ஆரம்பித்து பிராந்தியம் பூராகவும் ஒரு ஆழ்ந்த உறைபனி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதன் தாக்கம் ரொறொன்ரோவிலும் நேற்றுக் காலை காற்றுடன் கூடிய வெப்பநிலை பூச்சியத்திற்கு கீழ் 17 ஆக காணப்படுவதுடன் 5-சென்ரிமீற்றர்கள் வரையிலான பனி பொழிவும் இடம்பெற்றுள்ளது.

பனி தீவிரமாக காணப்படுவதால் நியு யோர்க்கின் பிரதான நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மூர்க்கத்தனமான பனி புயலினால் 150-ற்கும் மேற்பட்ட வாகனங்கள் பனிக்குள் புதையுண்டுள்ளன.

கனடா நயாகரா பல்கலைக்கழக பெண்கள் கூடைப்பந்தாட்ட அணியினர் பவ்வலோவில் அகப்பட்டு 24-மணித்தியாலங்கள் பேரூந்து ஒன்றிற்குள் இருந்துள்ளனர். பிற்ஸ்பேக்கில் விளையாட்டில் கலந்து விட்டு திரும்பி வந்து கொண்டிருக்கையில் பனிப்புயலில் அகப்பட்டுள்ளனர்.

பேரூந்தில் இருந்து காப்பாற்றப்பட்டு நேற்றுக் காலை பல்கலைக் கழகத்தை வந்தடைந்தனர்.

snow_03

snow_04

snow_06

Related Posts