Ad Widget

கத்திக்குத்தில் ஒருவர் படுகாயம்

ஆவரங்கால் பகுதியில் செவ்வாய்க்கிழமை(04) இரவு இடம்பெற்ற கத்திக் குத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த மாதவன் கோவிலன் (வயது 22) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்காகி கையில் படுகாயமடைந்தார்.

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இவரை, இடையில் மறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தியால் குத்தியவர் தலைமறைவாகியுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

Related Posts