Ad Widget

கண் சத்திர சிகிச்சையால் தொற்று: பொலிஸில் முறைப்பாடு

யாழ். திருநெல்வேலிப் பகுதியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் செய்யப்பட்ட, கண்புரைப் பாதிப்புக்கான சத்திரசிகிச்சையால், தனது உறவினரின் கண் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதெனவும், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் (25) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஒருவரின் உறவினர் ஒருவரே, இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்ற அவர், தனது முறைப்பாட்டை வழங்கினார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்படும் என பொலிஸார், தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த தனியார் வைத்தியசாலை ஒன்றில், கண்புரை நீக்கத்துக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது, கண்ணில் கிருமித் தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட 9 பேரில் 5 பேர், மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டனர்.

குறித்த தனியார் வைத்தியசாலையில், கடந்த சனிக்கிழமை கண்புரை நீக்கி சத்திர சிகிச்சை மேற்கொண்டவர்கள் கண்ணில் கிருமி தொற்று ஏற்பட்டமையால் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர், திங்கட்கிழமை இரவு, யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை நினைவுபடுத்தத்தக்கது.

Related Posts