Ad Widget

கட்டடங்கள் மட்டும் எஞ்சியுள்ள மகேஸ்வரனின் குடியேற்றத்திட்டம்

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனால் கல்லுண்டாய்வெளியில் நிர்மாணிக்கப்பட்ட குடியேற்றத்திட்ட வீடுகளின் கூரைகள் அனைத்து திருடப்பட்டு தற்போது கட்டுமானம் மட்டும் எஞ்சிய நிலையில் உள்ளது.

இந்துக் கலாசார அமைச்சராக மகேஸ்வரன் பதவி வகித்திருந்த காலப்பகுதியில், யாழ். நகரில் சொந்தக் காணிகள் மற்றும் வீடுகள் இல்லாமல் இருந்த குடும்பங்களைத் தெரிவுசெய்து அவர்களுக்காக கல்லுண்டாய்வெளியில் 25 வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தார்.

2002ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட இந்த குடியேற்றத்திட்டத்தில் யுத்தக் காலப்பகுதியின்போது பாரிய இராணுவ முகாமொன்று நிர்மாணிக்கப்பட்டதுடன் அங்கிருந்து ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டமையால் அந்த வீடுகளில் வசிக்க முடியாமல், குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்து சென்றனர்.

யுத்தத்தின் பின்னரும், அந்த வீடுகளை இராணுவத்தினர் தங்களது தேவைக்காக பயன்படுத்தி வந்தனர். இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியதும் வீடுகளின் கூரைகள், மற்றும் ஜன்னல்கள் திருடப்பட்டன. தற்போது வீட்டின் கட்டுமானம் மட்டும் எஞ்சியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts