Ad Widget

ஓகஸ்ட் 15 க்கு முன்னர் அடையாள அட்டைகள் வழங்கப்படல் வேண்டும்

sri-lanka-national-identity-cardஎதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் வட மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே தற்போது வடமாகாணப் பிரதேச செயலகங்களில் நடமாடும் சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஏ.எஸ்.எம்.சரத்குமார தெரிவித்தார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களைச் சோந்த பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள், பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அலுவலர்கள், ஆட்பதிவுத் திணைக்களத்தின் பட்டதாரிப் பயிலுனர்கள் ஆகியோருக்கான நடமாடும் சேவை தொடர்பான பயிற்சிப்பட்டறை நேற்று நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘வருடாந்தம் பத்து இலட்சம் பேருக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டையை அனைவரும் பெற்றுகொள்ள வேண்டும். அதற்க்கு ஒவ்வொரு அரச அலுவலர்களும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

உரிய ஆவணங்கள் இல்லையெனக் கூறி ஒருவருக்க அடையாள அட்டை வழங்குவதை தடுத்து நிறுத்தக் கூடாது. எந்தளவுக்கு ஒருவரிடம் இருக்கும் ஆவணங்களைக் கொண்டு தேசிய அடையாள அட்டை வழங்க உதவி புரிய முடியுமோ அந்தளவுக்கு உரிய ஆவணங்களை பெற்று தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொடுக்கவேண்டும்.

ஆட்பதிவுத் திணைக்கள அடையாள அட்டையை பெறாது விடுவதும் குற்றமாகும் அதேபோன்று அரச அலுவலர்கள் உரியவருக்கு அதனை பெற்றுகொடுக்க நடவடிக்கை எடுக்காமையும் கூட குற்றமாகும்.

அடையாள அட்டை இல்லாது விட்டால் ஒருவர் வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்களிக்க முடியாது தனது உரிமையை இழக்கும் நிலமை ஏற்படுகின்றது’ எனவும் குறிப்பிட்டார்.

Related Posts