Ad Widget

ஒரே நாள் இரவில் திடீரென தோன்றிய ஏரி: துனிசியா நாட்டில் ஏற்பட்ட அற்புதம்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான துனிசியாவில் திடீரென ஒரே நாள் இரவில் ஏரி ஒன்று தோன்றியுள்ளது. அதில் தண்ணீரும் அதிகம் இருப்பதால் அந்த அதிசய ஏரியை சுற்றுலாப்பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

thunsia-1

துனிசியா நாட்டின் கஃபசா என்ற பகுதியில் திடீரென ஒரே நாள் இரவில் ஏரி ஒன்று தோன்றியுள்ளது. அந்த ஏரியில் சுமார் 20மீ ஆழம் வரை தண்ணீர் உள்ளது. ஒரு மில்லியன் கனமீட்டருக்கும் அதிகமாக தண்ணீர் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த தண்ணீர் நீல நிறத்திலும் பச்சை நிறத்திலும் மாறி மாறி வருவதால் எதில் ஏதாவது ரசாயனம் அல்லது விஷம் கலந்திருக்கும் என அப்பகுதி மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

எனினும் அப்பகுதி மக்கள் அந்த ஏரியில் குதித்து நீச்சலடித்து மகிழ்ந்து வருகிறது. கடும் வறட்சிப்பகுதியான கஃபசாவில் திடீரென தண்ணீருடன் கூடிய ஏரி தோன்றியுள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திடீரென தோன்றிய ஏரியை பார்க்க பக்கத்து நாடுகளில் இருந்தும் உள்நாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்துகொண்டிருக்கின்றனர்.

thunsia-2

இந்த திடீர் ஏரி எப்படி தோன்றியிருக்கலாம் என புவியிலாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நில அதிர்வு காரணமாக பூமிக்கடியில் உள்ள தண்ணீர் வெளியே வந்து ஏரியாக மாறியிருக்கலாம் என அவர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ அந்த பகுதி மக்களின் தண்ணீர்ப்பிரச்சனை ஒரே நாள் இரவில் தீர்ந்தது.

Related Posts