ஐ.ம.சு.கூ.வின் தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்கு கல்வீச்சு தாக்குதல்

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் யாழ்ப்பாணம், மந்துவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (10) இரவு நடத்தப்பட்ட தேர்தல் பிரசாரத்தின் போது இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தமிழீழ எழுச்சிப் பாடல்களை ஒலிக்கவிட்டதை அடுத்தே, பிரசார மேடையை நோக்கி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டம் நிறுத்தப்பட்டது.

இதேவேளை, சாவகச்சேரி பகுதியில் நேற்று(10) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களிடம் யுவதியொருவர் கேள்விகள் சிலவற்றை எழுப்பியுள்ளார்.

அக்கேள்விகளுக்கு அவர்களால் பதிலளிக்க முடியாத நிலையில், அங்கிருந்து பிரசாரம் செய்தவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இதனால், அந்த பிரசாரக் கூட்டமும் இடைநடுவில் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts