Ad Widget

ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானம் தொடர்பாக மாவை தலைமையில் ஆராய்வு

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றுள்ளது.

மட்டக்களப்பு- வெல்லாவெளி பகுதியில் அமைந்துள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சி அலுவலகத்தில், மாவை சோ.சேனாதிராஜாவுக்கும் அக்கட்சியின் மட்டு.பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நேற்று (செவ்வாய்க்கிழமை)இடம்பெற்றுள்ளது.

இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம், முன்னாள் போராளிகளின் அரசியற் செயற்பாடுகள், சமகால அரசியல் நிலைமைகள், அடுத்து நடைபெறவுள்ள தேர்தலுக்கு முகம்கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு-அம்பாறை ஊடகப் பேச்சாளர் சாந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts