யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக் குழுவிற்கு சாட்சியம் அளிப்பேன் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேரடியாக யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை தான் காணாது விட்டாலும் ஐக்கிய நாடுகள் சபை சாட்சியம் அளிக்குமாறு தன்னைக் கோரினால் வரலாற்று பதிவுகளின் அடிப்படையில் நிச்சயமாக தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற நடவடிக்கைகள் பற்றி சாட்சியம் அளிக்க தயாராகவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.