Ad Widget

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 28ஆவது அமர்வு இன்று திங்கட்கிழமை (02) ஆரம்பமாகிறது. இந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சனிக்கிழமை (28) இரவு, ஜெனீவா சென்றடைந்தார்.

இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணை பற்றிய அறிக்கை, இந்த அமர்வின் போது முன்வைக்கப்படவுள்ளது.

இன்றைய அமர்வின் பின்னர் நடைபெறவுள்ள உயர்மட்டக் கூட்டத்தில் அமைச்சர் மங்கள சமரவீரவும் பங்கேற்பார் என வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதிலுமிருந்து 65 வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது, ஐக்கிய நாடுகள் மணித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹூசைனை சந்தித்து கலந்துரையாடவுள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் மனித உரிமைகளின் நிலை மற்றும் புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் நல்லிணக்க செயற்பாடுகளை பலப்படுத்துவதற்காக மேற்கொண்ட திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts