Ad Widget

ஐ.நா மனித உரிமைகளை் ஆணையாளரை சந்திக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது 29 ஆவது அமர்வில் ஸ்ரீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக .நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் எதிர்வரும் 29 ஆம் திகதி வாய் மூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்

இந்நிலையிலேயே ஸ்ரீலங்கா தொடர்பான வாய் மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் சமர்ப்பிப்பதற்கு முன்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அரசியல் கைதிகளின் விடுதலை, காணிகள் விடுவிப்பு ஆகியன தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தவுள்ளது.

Related Posts