நீதிபதிகள் மற்றும் சட்டவுரைஞர்களின் சுயாதீனம் பற்றிய விசேட அறிக்கையாளர் மோனிக்கா பின்ரோவும் சித்திரவதை மற்றும் கீழ்த்தரமான தண்டனைகளுக்கான விசேட அறிக்கையாளரான யுவான் மென்டெஸூம்
ஏப்ரல் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்.
இவர்கள், மே மாதம் 7ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருக்கவுள்ளனர்.
நீதிபதிகள் மற்றும் சட்டவுரைஞர் சுயாதீனம் பற்றிய விசேட அறிக்கையாளர், நீதித் துறையின் பக்கச்சார்பின்மை மற்றும் சுயாதீனம் என்பன மீறப்படுவதாக அறிந்து கொள்ளும் போது, அதுதொடர்பில், அரசாங்கங்களுக்குக் கடிதம் மற்றும் விண்ணப்பம் மூலம் தெரிவிப்பார்.
சித்திரவதை மற்றும் கீழ்த்தரமான தண்டனைகளுக்கான விசேட அறிக்கையாளர், வழங்கப்பட்ட பணி அதிகாரம் சகல நாடுகளையும் அடக்கியுள்ளது.
இங்கு ஒரு நாடு, சித்திரவதை மற்றும் கீழ்த்தரமான தண்டனை பற்றிய சமவாயத்தில் கையொப்பமிட்டுள்ளதா, இல்லையா என்பது கருத்தில் எடுக்கப்பட மாட்டாது.