Ad Widget

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பேஸ்புக், டுவிட்டர் கணக்குகள் முடக்கம் : நிறுவனர்களுக்கு கொலை மிரட்டல்

சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நிறுவனர்களுக்கு வீடியோ மூலம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

facebook-twitter-ISIS

பேஸ்புக்கும், டுவிட்டரும் தீவிரவாத்திற்கு எதிரான போரில் தாங்களும் இணைந்து கொள்வதாக அறிவித்தன.

சமீபத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் 1 லட்சம் கணக்குகள் பேஸ்புக் முடக்கப்பட்டது. டுவிட்டர்’ இணையதளத்தில் 1 லட்சத்து 25 ஆயிரம் கணக்குகள் முடக்கப்பட்டன.

அவை ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் அதன் அமைப்புடன் தொடர்பு கொண்டவை என டுவிட்டர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் மற்றும் டுவிட்டர் சிஇஓ ஜாக் டார்சே ஐஎஸ் பயங்கரவாதிகள் வீடியோ மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

அந்த வீடியோவில் மார்க் மற்றும் ஜாக்கின் படங்களைக் காட்டி அதில் துப்பாக்கி குண்டுகள் துளைத்தது போன்று டிஜிட்டல் வடிவத்தை அமைத்துள்ளனர்.

25 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் மார்க் ஸக்கர்பெர்க் மற்றும் ஜேக் டோர்சேக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts