Ad Widget

“ஐஸ் வாளி சவால்” ஜனாதிபதி, மேர்வின், ஹிருணிக்காவுக்கு அழைப்பு

மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் ‘ஐஸ் வாளி சவாலுக்கு’ அழைத்துள்ளார்.

malasa-kumara-ice-cahlange

மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஐஸ் வாளி குளியல் காட்சியை தன்னுடைய பேஸ் புக் (முகப்புத்தகம்) பக்கத்தில் தரவேற்றம் செய்துள்ளார்.

2(3600)

இந்த ‘ஐஸ் வாளி சவால்’ உலகளாவிய ரீதியில் கடந்த சில வாரங்களாக பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டுவந்துள்ளது. மூன்று வாளி ஐஸ் தண்ணீரை தலையுடன் ஊற்றிக்கொள்ளவேண்டும் என்பதே இதன் விதிமுறைகளில் ஒன்றாகும்.

அவ்வாறு ஊற்றிக்கொண்டவர் ஐஸ் வாளி சவாலுக்கு மூவரை அழைக்கவேண்டும். அந்த அடிப்படையிலேயே மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகிய மூவரையும் அழைத்துள்ளார்.

சவாலுக்கு அழைக்கப்பட்டவர் ஐஸ் வாளி சவாலை ஏற்றுக்கொள்ளாவிடின் அவர், அமெரிக்க டொலர்கள் மூன்றை தண்டமாக செலுத்தவேண்டும்.

ஐஸ் வாளி சவாலை ஏற்றுகொள்ளப்படாதவர்களிடமிருந்து கிடைக்கும் நிதி, லூ கெரிக்ஸ் நோய் என்று அழைக்கப்படும் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (ALS), பயன்படுத்தப்படுகின்றது.

ALS க்கு நிதி திரட்டுவதனால் இலங்கைக்கு எந்தவிதமான பயனும் இல்லை என்பதனால் அந்த நிதி ஒரு விலங்கு நல அறக்கட்டளையான ‘அரன்யாணிக்கு’ பயன்படுத்தப்படும் என்று மேல் மாகாண சபை உறுப்பினர் மலசா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஐஸ் வாளி சவாலை, லேடி காகா, டாம் குரூஸ், பில் கேட்ஸ், ஜார்ஜ் டபிள்யூ புஷ், மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஐஸ் வாளி சவாலை எடுத்துகொண்டுள்ள பிரமுகர்களில் சிலராவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts