Ad Widget

ஏழு பால்மாக்களில் டிசிடி இரசாயனம் இல்லை – சுகாதார அமைச்சு

Ministry of Health_0தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய, இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தினால் விடுவிக்கப்படாத ஏழு வகையான முழு ஆடை பால்மாக்களில் டிசிடி இரசாயனம் அடங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமது தலைமையில் நேற்று கூடிய உணவுப்பொருட்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால குறிப்பிட்டார்.

இதற்கமைய தற்போது டிசிடி இரசாயனம் அடங்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பால் மாக்களை சந்தைக்கு விநியோகிப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பால்மா வகைகளின் மாதிரிகளையும் ஆய்வுசெய்து டிசிடி இரசாயனம் அடங்கவில்லை என்பதை உறுதிசெய்த பின்னர் அவற்றை சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை வேப்ரோடின் அடங்கிய பால்மாக்களில் காணப்படும் பக்டீரியா தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின், ஐந்து அறிக்கைகள் நாளை கிடைக்கப்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

அங்கர், மெலிபன், டயமன்ட் பால்மாக்களில் நச்சு இரசாயனம்: விற்பனைக்கு தடை

Related Posts