Ad Widget

எமது நிலம் தமிழ் நிலமாக உருப்பெற நாம் இணைந்து போராட வேண்டும் – மாவை

உலக தமிழராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் நாற்பதாவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

tamil-arachche-tna

இதற்கான நிகழ்வுகள் இன்று காலை 9.30 மணியளவில் யாழ் முற்றவெளிப்பகுதியில் உள்ள நினைவுத்தூபிக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதன்போது மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில்,

1974ஆம்ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம்திகதி நான்காவது தமிழராய்ச்சி மாநாடு யாழ் முற்றவெளிப்பகுதியில் இடம்பெற்றது.

இந்த மாநாட்டிற்கு அரசாங்கத்தின் அனுமதி மறுக்கப்பட்டது. இந்த மகாநாட்டிற்கு பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று கூடியிருந்த வேளையில் மக்களை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் திட்டமிட்டு கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

மேலும் 1974ற்கு பின்னரும் 1977, 1981,1983 ஆம் ஆண்டுகலவரங்களாலும் பலர் கொல்லப்பட்டனர். இத்தனை காலமாக தமிழர்களின் விடுதலைக்காக பலர் தமது உயிரை மாய்த்தும் இன்னமும் தமிழர்களுக்கு விடுதலை பிறக்கவில்லை.

இந்த விடுதலைக்காக பாடுபட்டு பலரது உயிர் இழப்புக்கள் தான் சர்வதேச மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த வேளை தொடர்சியாக மக்கள் பலர் எழுந்து பல வழிகளில் நடத்திய போராட்டத்தில் சர்வதேச மயப்படுத்தப்பட்டுமுள்ளது.

மேலும் பல்லாயிரக்கணக்கானவர்களை கொலை செய்ததால் அரசாங்கத்திற்கெதிராக போர்க்குற்றம் சுமத்தப்பட்டு சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் இடம்பெறுகின்றது.

அதுமட்டுமல்லாது மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஜ.நா.மனித உரிமை பேரவையில் சர்வதேச போர்க்குற்றம் தொடர்பான விசாரணை இடம்பெறவுள்ளது.

இந்த பிரேரணை நம்பகத்தன்மையாக இடம்பெறவேண்டும் உண்மைகள் தக்கவிதமாக வெளிக்கொணர படவேண்டும்.

அவ்வாறு போர்க்குற்றச் சாட்டின்மூலம் சர்வதேசத்தின் தீர்மானம் எடுக்க நீண்ட அணுகுமுறைகள் காணப்பட்டால் உடனடியாக நமது தமிழ் இனத்தை முடக்கும் இராணுவங்கள் எங்கள் மண்ணில் குவிக்கப்பட்டும், சிங்கள குடியேற்றங்கள் திணிக்கப்பட்டும் வருகின்றது.

இன அடையாளமே அழிக்கப்பட்டிருப்பதை இல்லாமல் செய்தும் எங்களுடைய நிலம் தமிழ் நிலமாக உருப்பெற நாம் இணைந்து போராட வேண்டும்.

அத்துடன் ஜனநாயக ரீதியாக அறவெளியிலே சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்க பாடுபட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts