Ad Widget

என்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை – முரளிதரன்

தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

muththaiya -muralitharan

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்…

அரசியலில் தமக்கு நாட்டமில்லை எனவும், அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏதேனும் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால், தமது பெயர் அதற்காக பயன்படுத்துவது வழமையாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலில் ஈடுபட்டால் மட்டுமே மக்களுக்கு சேவையாயற்ற முடியும் என்பதில் தமக்கு நம்பிக்கை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறக்கட்டளைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக மக்களுக்கு தாம் சேவையாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தன்னை தமிழராகவோ இந்துவாகவோ அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பவில்லை எனவும், இலங்கையர் என்ற அடையாளமே முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாகவே சர்வதேச மனித உரிமை குற்றச்சாட்டுக்களின் போது அரசாங்கத்தின் சார்பில் குரல் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது தவிர அரசாங்கத்துடன் வேறு எந்த கூட்டணியும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல கட்சிகளினதும் அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்ற போதிலும் எவரும் அரசியலில் ஈடுபடுமாறு அழைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டாலும் அரசியல் களமிறங்கும் நோக்கம் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

பயிற்றுவிப்பாளர்களுடன் இணைந்து உரிய முறையில் செயற்பட்டால் இலங்கை வீரர் சசித்திர சேனாநாயக்கவிற்கு எதிரான தடையை நீக்கிக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், தடையை நீக்கிக் கொள்வது சசித்ர சேனாநாயக்கவின் கையில் உள்ளது என முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

முழு நேர பயிற்றுவிப்பாளராக செயற்படும் திட்டங்கள் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts