Ad Widget

எனக்கு புதிய புலிகளால் ஆபத்து – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

vicky0vickneswaranபுதிய புலிகளால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், கடந்த கால அரசியல் தலைமைகள் எதிர்நோக்கிய நிலைமைகளை தானும் எதிர்நோக்க வேண்டி ஏற்பட்டுள்ளது என்று அச்சம் வெளியிட்டுள்ளார்.

புதிய புலிகள் அமைப்பானது அரசின் பின்னணியுடன் உருவாகலாம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். சர்வோதய அமைப்பின் வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி ஒருவரே புதிய புலிகளை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்கு அரசு பின்னணியாக உள்ளது. இதன் மூலம் மீளவும் வெள்ளை வான் கடத்தல்கள் புதிய முறையில் தொடரலாம் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

போர் முடிந்த பின்னரும் வடக்கில் இராணுவத்தினர் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளதானது, மறைமுக நோக்கங்களுக்காகவே என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவம் எங்கள் இடங்களை அபகரிக்கிறது. எமது நிலம், தொழில், தொழில் வாய்ப்புக்கள் என்பன கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. இதனை விட தமிழ் விதவைப் பெண்களின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகியுள்ளது.

போர் முடிந்த பின்னர் வடக்கில் பொலிஸ் நடவடிக்கைகளை ஏன் இன்னமும் அரசு அதிகரிக்காமல் இருக்கின்றது? என்ற கேள்வியை சாதரண சிங்கள மக்கள் அரசிடம் கேட்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Related Posts