ஊர்காவற்றுறை – காரைநகர் பாதையில் பயணிகளைத் தாக்கிய வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பாதைப் பணியாளர் 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று புதன்கிழமை(26) ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்டபோதே மன்று அவருக்கு விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தது.
இதேவேளை கடமை நேரத்தில் பாதைச் சேவையில் ஈடுபடாமல் மது போதையில் நின்று படகு ஓட்டுநரைத் தாக்கிய மற்றைய பணியாளரும் நேற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.
குறித்த நபருக்கு நீதிமன்று 100 மணித்தியாலங்கள் சமூகசேவைக்கு உத்தரவிட்டது.
??? ???????? ??? ?????? ??????? ???? ??????????? ????????? ????????!!