Ad Widget

உள்ளூர் உற்பத்திகளை இனி இணையம் விற்பனை செய்யலாம்! – ஆளுநர் தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் ,உள்ளூர் உற்பத்திகளை ஒன்லைனில் விற்பனை செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மாதாந்த மகளீர் சந்தை நிகழ்வில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்:

 உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த விற்பனைக் கண்காட்சி இடம்பெறுகிறது.தரமான உள்ளூர் உற்பத்திகள் இங்கே உள்ளன.அவற்றை நாம் விளம்பரப்படுத்த வேண்டும்.

இப்போது உள்ள நிலைமைகளில் பேஸ்புக்,இணையத்தளம் ,உள்ளிட்ட ஒன்லைன் முறைமை ஒன்றை உருவாக்க உள்ளோம்.இதன் மூலம் எமது உற்பத்தியாளர்கள் தமது உற்பத்திகளை ஒன்லைனில் சந்தைப் படுத்தக் கூடியதாக இருக்கும்.

அத்துடன் கொழும்பு சென்று தமது வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடிய வசதிகளையும் நாம் செய்து கொடுக்கவுள்ளோம்.அதே போன்று ,பேருந்து நிலையம்,ரயில் நிலையம்,மற்றும் விமான நிலையங்களில் எமது உள்ளூர் உற்பத்திகளை காட்சிப் படுத்தி விற்பனை செய்யக் கூடிய வகையில் நடவடிக்கை எடுப்படவுள்ளது.

அதே போன்று புதிய பேருந்து தரிப்பிடத்தில் குறிப்பிட்ட தினங்களில் குறிப்பிட்ட நேரங்களில் விற்பனை நேரங்கள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என்றார்.

Related Posts