Ad Widget

உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளை மீறி வடக்கில் சமூர்த்தி மாநாடு

Samurdhiதேர்தல் விதிமுறைகளை மீறி சமூர்த்தி அதிகார சபையினால் வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும் மாவட்ட மாநாடுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவவருகின்றது.

பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சமூர்த்தி அதிகார சபையினராலேயே இந்த மாவட்ட மாநாடுகள் ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளன.

வடமாகாண சபைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இவ்வாறான மாநாடுகள் நடாத்தப்படக் கூடாது எனத் தேர்தல் திணைக்களம் அறிவித்திருந்தது. ஆயினும் அதனை மீறி பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் சமூர்த்தி அதிகார சபை இதனை ஏற்ப்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் 6ம் திகதி வவுனியாவிலும், 7ம் திகதி யாழ்ப்பாணத்திலும், 9ம் திகதி கிளிநொச்சியிலும், 10ம் திகதி முல்லைத்தீவிலும், 12ம் திகதி மன்னாரிலும் இந்த மாவட்ட மாநாடுகள் இடம் பெறவுள்ளன.

சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு நடைபெறும் இந்த மாவட்ட மாநாட்டுக்கு அகில இலங்கை சமூர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் என்பனவே ஒழுங்குகளை முன்னேடுத்துள்ளன.

Related Posts