Ad Widget

உலக புகையிலை எதிர்ப்பு தினம் யாழில்!

உலக புகையிலை எதிர்ப்பு தினம் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் விஞ்ஞான சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண சுகாதார சுதேசிய அமைச்சர் எஸ் சத்தியலிங்கமும் சிறப்பு விருந்தினாகளாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத் துறையின் முன்னாள் தலைவர் வைத்தியகலாநிதி என்.சிவராசா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி சிவன்சுதன், யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமுதாய மருத்துவத் துறைத தலைவர் வைத்தியகலாநிதி சுரேந்திரன், மருத்துவ பீடாதிபதி வைத்தியகலாநிதி பேராசிரியர் சிவபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மங்கள் விளக்கினை விருந்தினர்கள் ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து புற்றுநோய் மற்றும் புகைத்தல சம்பந்தமான விளக்கவுரைகள் இடம் பெற்றன. மக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் செம்முகம் ஆற்றுகைக் குழுவின் ‘உயிர் திண்ணும் புகை’ என்னும் குறியீட்டு நாடகமும் இடம்பெற்றன.

இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் புகைப்பொருள்கள் விற்பனை செய்யாத வர்த்தகர்களை பாராட்டி சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Related Posts