Ad Widget

உலக நாடுகளுடன் மோதமாட்டோம்: டொனால்ட் டிரம்ப்

உலக நாடுகளுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கப் போவதில்லையென்றும் அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாவே செயற்படுவேன் என்றும் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

உலகின் மிகவும் பலம் பொருந்திய பதவியாக கருதப்படும் அமெரிக்க ஜனாதிபதி பதவியை தனதாக்கிக்கொண்ட குடியரசுக் கட்சியின் டொனால்ட் டரம்ப், தனது வெற்றியை அடுத்து நேற்று (புதன்கிழமை) ஆற்றிய கன்னி உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு பலத்த போட்டியாக காணப்பட்ட ஹிலரி கிளின்டன் முன்னெடுத்த தீவிர பிரசாரத்திற்காக அவருக்கு பாராட்டு தெரிவித்ததாக குறிப்பிட்ட டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்கா தனது பிரிவினைவாத காயங்களுக்கு முடிவு கண்டு, அனைவரும் ஒரு தேசத்தின் மக்களாக இணையவேண்டிய தருணம் வந்துவிட்டதென தாம் நம்புவதாக மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமெரிக்காவின் நலன்களுக்கே எப்போதும் முன்னுரிமை கொடுத்து செயற்படுவேன் என உறுதியளித்துள்ள டொனால்ட் டரம்ப், உலக நாடுகளை பொறுத்தவரையில் பொதுவான நிலைப்பாடுகளையே அடைய முயல்கின்றோம் என்றும், அனைவரையும் நியாயமாக நடத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts