Ad Widget

உலகின் சிறந்த ஆசிரியருக்கு 1 மில்லியன் பரிசு

உலகின் சிறந்த ஆசிரியராக அமெரிக்காவை சேர்ந்த நான்ஸி அட்வேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கிடைக்கும் 1 மில்லியன் அமெரிக்க டொலர்களை தான் உருவாக்கிய பள்ளியின் வளர்ச்சிக்கே கொடுக்க போவதாக அறிவித்துள்ளார்.

best-Teacher-Prize.2

ஆசிரியர் பணியை சிறப்பிக்கும் வகையிலும், அதன் மதிப்பை உயர்த்தும் நோக்கத்துடனும் ‘உலக ஆசிரியர் விருது’ உருவாக்கப்பட்டு, இந்த ஆண்டு முதல் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி முதன் முதலாக அமெரிக்காவை சேர்ந்த ஆங்கில ஆசிரியை நான்ஸி அட்வேல் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டார். அதற்கான விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கும் விழா துபாயில் நடந்தது.

இந்த விருதை பெற்ற பிறகு பேசிய நான்ஸி அட்வேல் “இந்த விருதை பெறுவதற்காக பெருமைப்படுகிறேன். இந்த பரிசுத்தொகை முழுவதையும் நான் உருவாக்கி நடத்திவரும் பள்ளியின் வளர்ச்சிக்கே கொடுக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் இந்த விருது மூலம் பல திறமையானவர்கள் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுப்பார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

Related Posts