Ad Widget

உலகளவில் 90ஆவது இடத்தில் இலங்கை – கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 887 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 859 பேருக்கும் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 19 பேருக்கும் கொரொனா தொற்று உறுதியானதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி மினுவாங்கொடை, பேலியகொடை மற்றும் சிறைச்சாலை கொத்தணிகளில் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 70 ஆயிரத்து 235 ஆக உயர்வடைந்துள்ளது.

அவர்களில் 64 ஆயிரத்து 141 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 5 ஆயிரத்து 729 நோயாளர்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோயாளர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், கொரோனா பரவல் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை 90ஆவது இடத்திற்று முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts