உரும்பிராய் காணியில் கைக்குண்டு மீட்பு

உரும்பிராய் கற்பக பிள்ளையார் கோயில் பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று, நேற்று (29) மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில், கட்டடப்பணி இடம்பெற்ற போது, மண்ணில் புதையுண்ட நிலையில் குறித்த கைக்குண்டு தென்பட்டுள்ளது.

இது தொடர்பில், பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்று, குறித்த கைக்குண்டை மீட்டு, செயழிக்க வைப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Related Posts