உரும்பிராயில் 7 வீடுகளுக்கு சேதம் விளைவிப்பு

attack-attackஉரும்பிராய்ப் பகுதியில் ஒரே வீதியில் உள்ள 7 வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் திங்கட்கிழமை (16) இரவு அடித்து உடைக்கப்பட்டதுடன், ஒவ்வொரு வீட்டிலும் தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறியிருந்தமையினால் உயிர்ச் சேதங்கள் ஏற்படவில்லையெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அங்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், இன்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உரும்பிராயினைச் சேர்ந்த கும்பலொன்று கோண்டாவிலைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவனை வாளால் வெட்டிக் கொலை செய்ததின் எதிரொலியாகவே மேற்படி வீடுகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

யாழில் ஒருவர் வெட்டிக்கொலை; தொடரும் திருட்டுக்கள் வாள்வெட்டுக்கள்!சட்டம் ஒழுங்கு கெடும் அபாயம் பொலிசார் அசமந்தம்!

Related Posts