Ad Widget

உண்மைக்குப் புறம்பான செய்திக்கு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் சந்திரகுமார் மறுப்பு.

chantherakumar-epdpஉண்மைக்குப் புறம்பான வகையில் 26.11.2013 பிரபாகரனைப் புகழ்ந்து சிறிதரன் எம்.பி. நாடாளுமன்றில் உரை என்ற தலைப்பில் தங்களது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் செய்தியில் என்னுடைய பெயர் தவறான விளக்கத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

‘இந்த உரையை ஹன்ட்சாட்டில் இருந்து அழித்துவிடும்படி பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் பணித்தார்.’ என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பது முற்றிலும் தவறானது என்பதுடன், என்னுடைய பொறுப்பு மிக்க பணிக்கு களங்கம் விழைவிப்பதாகவும் அமைந்துள்ளது.

கடந்த 26.11.2013 பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் மீதான உரைய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி. சிறிதரன் ஆற்றியிருந்தார். அந்தச் சந்தர்ப்பத்தில் நானே சபை நடவடிக்கையை தலைமை ஏற்று மேற்கொண்டிருந்தேன். சிறிதரன் ஆற்றிய உரை பாராளுமன்ற நிலையியற் சட்டத்திற்கு முரணான முறையில் அமைந்திருக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக் ஒழுக்குப் பிரச்சினையை எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து இதற்குப் பதிலளித்துத் தீர்ப்பு வழங்க வேண்டியிருந்த நான் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சி. சிறிதரனின் உரையில் பாராளுமன்ற நிலையியற் சட்டத்திற்கு முரணாக ஏதாவது இருப்பின் அதை பாராளுமன்ற அவைக் குறிப்பில் சேர்ப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு பணித்திருந்தேன்.

எனது பணிப்புரைக்கமைய சி. சிறிதரனின் உரை பரிசீலிக்கப்பட்டு பாராளுமன்ற அவைக்குறிப்பில் வழமையைப்போல் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது.

உண்மை இவ்வாறிருக்க அவசர அவசராக சிறிதரனின் உரையை ஹன்சார்ட்டிலிருந்து பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் மு. சந்திரகுமார் அழிக்குமாறு பணித்தள்ளார் என்று குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் தவறானதாகும். இது ஒரு விடயத்தைத் தீர விசாரித்தறியாமல் வெளியிடப்பட்ட ஊடகவியலுக்குப் புறம்பான செயலாக உள்ளது என எனத் தெரிவிக்கிறேன்.

எனவே என்னைக் குறித்து வெளியாகியிருக்கும் தவற்றினைத் திருத்தி, என்னுடைய பதிலைப் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மு. சந்திரகுமார் (பா.உ.)
பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர்

தொடர்புடைய செய்தி

பிரபாகரனை புகழ்ந்து ஸ்ரீதரன் எம்.பி நாடாளுமன்றில் உரை

Related Posts