Ad Widget

உணவு, குடிதண்ணீரில் சுகாதாரம் பேணுங்கள்; தொற்றுநோய்கள் பரவும் அபாயம்

தொடர்மழையை அடுத்து வடக்கில் தண்ணீர் மூலமாகப் பரவும் நோய்களின் தொற்று தீவிரமடையலாம் என்பதால் உணவு, குடிதண்ணீர் என்பவற்றின் சுகாதாரத்தைப் பேணுமாறு சுகாதாரப் பிரிவினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கிணறுகள் உட்பட நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் மலக்குழிகளிலும், கைவிட்டப்பட்ட கிடங்குகளிலும் வெள்ளம் தேங்கி அவை நிரம்பி கிணறுகளில் கலக்கும் சாத்தியங்கள் உள்ளன.

தண்ணீர் மூலம் பரவும் நெருப்புக்காய்ச்சல், வயிற்றோட்டம், செங்கமாரி உள்ளிட்ட நோய்கள் தொற்றுவதற்குச் சாத்தியம் உள்ளன. பெரியளவில் அவ்வாறான தொற்று ஏதும் இதுவரை ஏற்பட்டிருக்கவில்லை. என்னும் அவ்வாறு ஏற்படச் சாத்தியம் உள்ளது.

எனவே கொதித்தாறிய நீரை குளோரின் கலந்து பருக வேண்டும். உணவு வகைகளில் சுகாதாரத்தைப் பேணவேண்டும். நிலத்தில் வைத்தபடி சந்தைகளில் விற்பனை செய்யப்படும் மரக்கறி வகைகளிலும் பொதுமக்கள் விழிப்பாக இருத்தல் வேண்டும்.

மரக்கறி வகைகள் அரை அவியலுடனும். பச்சையாக பதப்படுத்தியும் உணவாக உட்கொள்ளப்படுவதனால் அவற்றில் மிக அவதானமாக இருக்கவும். பழங்களைக் கொள்வனவு செய்வது, கொள்வனவு செய்து வைத்திருப்பது, அவற்றை உண்பது என்பன தொடர்பில் முக்கியமாக சிறார்களின் உணவில் சுகாதாரத்தைப் பேணுங்கள் என்று சுகாதாரப் பகுதியினர் மேலும் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Posts