Ad Widget

உடல்நலக் குறைவால் கருணாநிதி வைத்தியசாலையில்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. கருணாநிதி உடல் நலக் குறைவின் காரணமாக, சென்னையிலுள்ள ‘காவிரி’ என்ற தனியார் வைத்தியசாலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கருணாநிதிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதனால், அவரைப் பார்க்க வருவதைத் தவிர்க்க வேண்டுமென்றும் கடந்த ஒக்;டோபர் மாதம் 25ஆம் திகதி, தி.மு.கவினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் தனது கோபாலபுரம் இல்லத்திலிருந்து புறப்பட்ட கருணாநிதி, ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள காவிரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருடன் ராஜாத்தி அம்மாள், தி.மு.க பொருளாளர் மு.க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் உடன் சென்றனர்.

Related Posts