Ad Widget

உக்ரைன் வான்வெளியில் திடீரென வெடித்துச் சிதறிய மர்ம பொருள்!

உக்ரைன் தலைநகரில் திடீரென்று தோன்றிய மர்ம பொருள் ஒன்று சில நிமிடங்களில் நெருப்பு கோளமாக வெடித்துச் சிதறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தலைநகரின் வான்வெளியில் மர்ம பொருள் தோன்றியதும், வான் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகள் நகரம் முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா தொடர்பில் சந்தேகம் எழுந்ததால், வான் தாக்குதல் எச்சரிக்கையும் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி விடுக்கப்பட்டது.

ஆனால் மக்கள், 21 ஆண்டுகளுக்கு பின்னர் கட்டுப்பாட்டை இழந்து RHESSI செயற்கைக்கோள் பூமியில் விழுகிறதா என அச்சத்தில் தடுமாறியுள்ளனர்.

இந்த விடயத்தை கீவ் நகர அதிகாரிகளும் உறுதி செய்ததுடன், உக்ரைன் வான்வெளியில் நெருப்பு கோளமாக வெடித்துச் சிதறியது RHESSI செயற்கைக்கோள் என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே நாசா அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், RHESSI செயற்கைக்கோள் உறுதியாக அதன் வட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது என விளக்கமளித்துள்ளனர்.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அது RHESSI செயற்கைக்கோள் கட்டுப்பாட்டை இழந்து 21 ஆண்டுகளுக்கு பின்னர் பூமியில் விழ இருக்கிறது என தெரியவந்தது. கடந்த 2002ல் சூரிய கதிர்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக RHESSI செயற்கைக்கோள் செலுத்தப்பட்டது.

அதன் ஆயுட்காலம் 16 ஆண்டுகள் என்றே அப்போது கூறப்பட்டது. ஆனால் தற்போதும் அந்த செயற்கைக்கோள் செயற்பாட்டில் இருப்பதாகவும் அனால் தொலைத்தொடர்பு ஏற்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும் நாசா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts