Ad Widget

உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பு!!

உக்ரைனில் இருந்து தானியங்கள் மற்றும் பிற உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு போலந்தும் ஹங்கேரியும் தடை விதித்துள்ளன.

போலந்து பிரதம மந்திரி அலுவலகம் இந்த நடவடிக்கை “போலந்து விவசாய சந்தையை ஸ்திரமின்மைக்கு எதிராக பாதுகாக்க” என்று தெரிவித்துள்ளது.

இதையடுத்து, போலந்து நாட்டின் முடிவு குறித்து உக்ரைன் வருத்தம் தெரிவித்துள்ளது. “ஒருதலைப்பட்சமான கடுமையான நடவடிக்கைகளால் பல்வேறு சிக்கல்களைத் தீர்ப்பது நிலைமையின் நேர்மறையான தீர்வை விரைவுபடுத்தாது” என்று உக்ரைன் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஹங்கேரிய விவசாய அமைச்சர் இஸ்த்வான் நாகி தானியங்கள், எண்ணெய் விதைகள் மற்றும் பிற விவசாயப் பொருட்களை உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்வதை தற்காலிகமாக தடை செய்வதாக அறிவித்தார்,

“அர்த்தமுள்ள ஐரோப்பிய ஒன்றிய நடவடிக்கைகள் இல்லாத நிலையில்” இந்த நடவடிக்கை அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts