Ad Widget

உக்ரைனுக்கு அமெரிக்காவின் ஆதரவு தொடரும்: ஜோ பைடன் உறுதி

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க தயாராக உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கத்தைத் தவிர்க்கும் தற்காலிக உடன்பாட்டில், உக்ரைனுக்கான ஆறு பில்லியன் டொலர் கூடுதல் உதவி வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”குடியரசுக் கட்சியின் தீவிரப் போக்குடைய உறுப்பினர்கள் சிலர் உக்ரைனுக்கு கூடுதல் இராணுவ உதவி வழங்குவதை எதிர்க்கின்றனர்.

போர் குறித்த தனது அணுகுமுறையையும் அவர்கள் ஏற்கவில்லை.

ஆனால், எந்தச் சூழலிலும் உக்ரேனுக்கான உதவி தடைபடுவதை நான் அனுமதிக்கப் போவதில்லை. அமெரிக்காவிடமிருந்து உக்ரைனுக்குத் தொடர்ந்து ஆதரவு கிடைக்கும்” என பைடன் தெரிவித்துள்ளார்.

Related Posts