Ad Widget

ஈவினை இளைஞனிற்கு எமனானது லீசிங்

லீசிங் நிறுவனம் லொறியை பறித்துச் சென்றதால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.புன்னாலைக்கட்டுவன் தெற்கு, ஈவினைப் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியம் அச்சுதன் (வயது 25) என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில் ;-

அச்சுதனுடைய தந்தை உயிரிழந்து விட்டார். இவருக்கு 3 பெண் சகோதரிகள் உள்ளனர். அச்சுதன் தான் தாய் மற்றும் 3 சகோதரிகளினுடைய குடும்பசுமையை சுமந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சுன்னாகத்தில் செயற்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் தவணை அடிப்படையில் பணத்தினை செலுத்தும் (லீசிங்) முறை மூலம் லொறியொன்றினை பெற்று தொழில் செய்துவந்தார்.

இருப்பினும் சீரான முறையில் தொழில் கிடைக்காமையால் குடும்பச்செலவிற்கும், தவணைப்பணம் செலுத்துவதற்கும் கஷ்டப்பட்டு வந்த நிலையில் குறித்த நிறுவனம் ரவுடிக் கும்பலை கொண்டு அயலவர்கள் மத்தியில் அவமானமடையச் செய்து அராஜகமான முறையில் லொறியை பறித்துச் சென்றது.

அதனை தொடர்ந்து மனவுளைச்சளிற்கு உள்ளான இவர் நேற்று காலை முழுவதும் கடும்யோசனையுடன் இருந்து வந்த நிலையில் வீட்டில் உள்ளவர்கள் அயலில் உள்ள ஆலயத்திற்கு சென்ற வேளை தூக்கில் தொங்கியுள்ளார். – என அவர் தெரிவித்தார்.

Related Posts