Ad Widget

ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப ஒபாமா ஒப்புதல்

ஈராக்குக்கு மேலும் 200 இராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்பதல் அளித்துள்ளார்.

Obama

ஈராக்கில் ஷியா அர­சுக்கு எதிராக சுன்­னி­பி­ரிவை சேர்ந்த ‘ஐ.எஸ்.ஐ.எஸ்.’ போரா­ளிகள் உள்­நாட்டு போரில் ஈடு­பட்­டுள்­ளனர். ஈராக் இரா­ணு­வம் பலத்­துடன் உள்­ள போதும் போரா­ளி­களை கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை.

காரணம் அவர்­க­ளிடம் அதி­ந­வீன போர்க்­க­ரு­விகள் உள்­ளன. அவற்றை சுன்­னி­பி­ரிவை சேர்ந்த அண்டை நாடுகள் வழங்கி உள்­ளன. மேலும் அந்நாடுகள் அவர்­க­ளுக்கு மறை­முக ஆத­ரவு அளித்து வரு­கின்­றனர். ஈராக் இரா­ணு­வத்தில் உள்ள சுன்­னி­பி­ரிவு வீரர்­களும் போரில் ஈடு­பட மறுக்­கின்­றனர். இது போன்ற கார­ணங்­களால் அர­சுக்கு பின்­ன­டைவு ஏற்­பட்­டுள்­ளது.

ஈராக்கில் முகா­மிட்­டி­ருந்த அமெ­ரிக்கப டைகள் 2011– ஆம் ஆண்டில் வெளி­யே­றின. அதன்­பி­ற­குதான் அங்கு போரா­ளிகள் கை ஓங்­கி­யது. அங்கு முகா­மிட்­டி­ருந்­த­போது ஆயி­ரக்­க­ணக்­கான அமெ­ரிக்க வீரர்கள் உயி­ரி­ழந்­தனர். பலத்த சேதம் ஏற்­பட்­டது.

தற்­போது நிலை­மையை சமா­ளிக்க மீண்டும் அமெ­ரிக்க உத­வியை ஈராக் நாடி­யது. ஆனால் ஏற்­க­னவே ஏற்­பட்ட கசப்­பான அனு­ப­வத்தால் உட­ன­டி­யாக அதில் தலை­யிட அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஒபாமா விரும்­ப ­வில்லை. நிலை­மையை உற்று கவ­னிப்­ப­தாக தெரி­வித்தார். இரா­ணு­வத்தை அனுப்ப மாட்டோம் என்றும் அறி­வித்தார்.

அதே சம­யத்தில், பக்­தாத்தில் உள்ள அமெ­ரிக்க தூத­ரகம் மற்றும் அங்கு முகா­மிட்­டுள்ள இரா­ணுவ வீரர்­களை பாது­காக்­கவும், அவர்­க­ளுக்கு பயிற்சி அளிக்­கவும் 300 ஆலோ­ச­கர்­களை அனுப்­பு­வ­தாக அறி­வித்தார். அவர்­களில் பலர் அங்கு சென்று ஈராக் இரா­ணுவ வீரர்­க­ளுக்கு போர் பயிற்­சி­களை அளித்து வரு­கின்­றனர்.

இதற்­கி­டையே, போரா­ளி­க­ளையும் அவர்­களின் இருப்­பி­டங்­க­ளையும் கண்­கா­ணிக்க ஆளில்லா விமா­னங்கள் பறக்க விடப்­படும் என ஏற்­க­னவே அமெ­ரிக்கா அறி­வித்து இருந்­தது.

அதன்­படி தலை­நகர் பக்தாத் நகரின் மீது அமெ­ரிக்­காவின் ஆளில்லா விமா­னங்கள் பறந்து வட்­ட­மிட்டு வரு­கின்­றன. அவற்றில் ‘ஹெல்­பயர்’ என்ற ஏவு­க­ணைகள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. அமெ­ரிக்க தூத­ர­கங்­களின் பாது­காப்­புக்­கா­கவே இந்த ஆளில்லா விமா­னங்கள் பயன்­ப­டுத்­த­ப்ப­டு­கின்­றன என அமெ­ரிக்கா தெரி­வித்­தது.

இந்­நி­லையில், ஈராக்­குக்கு மேலும் 200 இராணுவ வீரர்­களை அனுப்ப அமெ­ரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று ஒப்­புதல் அளித்­துள்ளார். இதன்­படி, ஏற்­க­னவே ஈராக்கில் உள்ள 275 அமெ­ரிக்க வீரர்கள், பின்னர் அறி­விக்­க ப்­பட்ட 300 வீரர்கள், தற்­போது அறி­விக்­க ப்­பட்­டுள்ள மேலும் 200 வீரர்கள் என சேர் த்து ஈராக்­குக்கு அமெ­ரிக்கா அனுப்பும் இரா ணுவ வீரர்­களின் மொத்த எண்­ணிக்கை 775 ஆக உயர்ந்­துள்­ளது.

இவர்கள் அனை­வரும் அங்­குள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தலைநகர் பக் தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்ட்டக னின் செய்தித் தொடர்புத்துறை செயலாளர் கோன் எப் கிர்பி தெரிவித்துள்ளார்.

Related Posts