Ad Widget

ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மாணவர் கௌரவிப்பு

மிகச் சிறப்பாக நடைபெற்றது யாழ்ப்பாணம் ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் சிங்களக் கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவர்களின், கௌரவிப்பு மற்றும் கலைநிகழ்வுகள்.

மூன்று மாத கால இடைவெளியில் சிங்களப் பாடநெறியினைப் பூர்த்தி செய்து சரளமாக சிங்களத்தில் உரையாடத் தக்கமுறையில் பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த மாணவர்களால் முற்று முழுதாக சிங்கள மொழியிலேயே சிறப்பாக நிகழ்வுகள் கல்லூரியின் மண்டபத்தில் இடம் பெற்றது.

செல்வி S.தர்சிகா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக தீவக கல்வி வலயத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.S.செல்வராஜா மற்றும் கல்லூரியின் தலைவர் லயன் ஜெ.றஜீவன் கல்லூரியின் பணிப்பாளர் டாக்டர்.லயன்.க.ஜெயச்சந்திரமூர்த்தி, சிங்கள விரிவுரையாளர் திருமதி.வினிபெரடா , சர்வதேச ஆங்கிலக் கற்கை நெறிகள் மற்றும் பரீடசைகள் இணைப்பாளர் திருமதி.ற.மயூரிக்கா, கல்லூரியின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

சிங்கள மொழியில் எதுவித சொற்களையும் அறியாத நிலையில் கற்கை நெறியினை ஆரம்பித்த மாணவர்கள் ஒரு மொழியில் முக்கிய அம்சங்களான இசை இயல் நாடகம் என்ற பாங்கிற்கு அமையக் கற்றுத் தங்கள் திறமைகளை பேச்சுக்கள், பாடல்கள், நாடகங்கள் எனச் தனிச் சிங்கள மொழியில் சிறப்பாக நடாத்திக் காட்டியமை நிகழ்விற்கு வந்த அனைவரையும் வியப்புற வைத்தது.

பிரதம விருந்தினர் உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு.செல்வராஜா தனது உரையில் 48 மணித்தியாலத்தில் (மூன்று மாதங்களில்) மாணவர்கள் அடைந்த தேர்சியை வியப்போடு பாராட்டியதுடன் சிங்கள மொழியினை கற்பித்த சிங்கள் விரிவுரையாளரைவும் பாராட்டி உரையாற்றியிருந்தார்.

இன்றைய நிலையில் மொழிகளின் அவசியம் குறித்து உரையாற்றியிருந்த பிரதம விருந்தினர் ஈசிற்றி ஆங்கிலக் கல்லூரியின் மகத்துவமான சேவையைப் பெரிதும் பாராட்டியிருந்தார். ஆங்கில மொழி மட்டுமல்லாது சிங்கள மொழியிலும் மாணவர்களை சிறப்புத் தேர்ச்சி பெறச் செய்து மொழிகளை லாவகமாக பேசவைப்பது மிகவும் கடினமான செயலாகும் அந்த வகையில் ஈசிற்றி கல்லூரியின் சேவை இன்றைய மக்களின் மிகச் சரியான தெரிவாகும் எனவும் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் மாணவர்களின் மொழி ரீதியாக கல்விப் பசியைத் தீர்க்கும் காமதேனுவாக இருக்கும் ஈசிற்றிக் கல்லூரி நாட்டில் வாழும் பல்லாயிரக் கணக்கானோரின் நன்மதிப்பெயும் பாரட்டையும் பெற்ற கல்வி நிறுவனத்தில் அதிகளவிலான மாணவர்கள் இணைந்து கற்று வருவது புத்திசாலித்தனமான முடிவு எனவும் குறிப்பிட்டார்.

இந்தப் பாடநெறியைப் பூர்த்தி செய்தவர்கள் மிகவும் சிறந்த முறையில் எழுத வாசிக்க முடிவதுடன் சரளமான முறையில் சிங்கள மொழியினை பேசவும் முடிகின்றது. அந்த வகையில் தமக்கு அர்பணிப்புடன் கற்பித்த விரிவுரையாருக்கு மாணவர்கள் தங்கள் நன்றிகளை உணர்பூர்வமாகத் தெரிவித்திருந்தனர்.

e-city-function (1)

e-city-function (2)

e-city-function (3)

e-city-function (4)

e-city-function (5)

Related Posts