இ.போ.ச. பஸ் மீது கோண்டாவிலில் கல்வீச்சு!

கோண்டாவில் டிப்போவில் நிறுத்துவதற்காக இரவு கொண்டு செல்லப்பட்ட பஸ் வண்டியின் மீது இனந் தெரியாதவர்கள் மேற்கொண்ட கல்வீச்சு தாக்குதலில் ஒரு பஸ் வண்டியின் கண்ணாடிகள் உடைந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பயணிகளை இறக்கிவிட்டு கோண்டாவில் சாலையில் நிறுத்துவதற்காக வந்த வேளையில் டிப்போவுக்கு அண்மையாக இடம்பெற்ற இந்த தாக்குதலுக்கான காரணம் எதுவும் தெரியவரவில்லை.

இது சம்பந்தமாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளார்கள்.

Related Posts