வரணி இயற்றாளை பகுதியினைச் சேர்ந்த தவராசா தர்ஷிகன் (வயது 21) என்பவரை காணவில்லையென அவரது தந்தை செவ்வாய்க்கிழமை (05) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் புதன்கிழமை (06) தெரிவித்தனர்.
கடந்த திங்கட்கிழமை (04) மேசன் வேலைக்காக கிளிநொச்சி உடையார்கட்டுக்குச் சென்ற மகன் இதுவரையில் வீடு திரும்பவில்லையென, தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.