இளம்பெண் குத்திக்கொலை; தாயார் படுகாயம் – தாக்குதல் நடத்திய இளைஞன் ரயிலில் பாய்ந்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் இளம்பெண் ஒருவரை கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு, அவரது தாயாரையும் படுகாயப்படுத்திய இளைஞன் ஒருவன், புகையிரதம் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவில் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞன், அங்கிருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை நடத்தியுள்ளான். இதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேவேளை, அப்பெண்ணின் தாயார் மீதும் இளைஞன் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில், அவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை நடத்திய பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற இளைஞன், அரியாலைப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு தபால் புகையிரதம் முன்பாக பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளான்.

இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts