Ad Widget

இலஞ்சம் கேட்டால் முறையிடவும்: அங்கஜன்

angajan ramanathanஅரச நியமனங்கள் பெற்றுக்கொள்வதற்கு எவராவது இலஞ்சம் கேட்டால் அவர்களுக்கு எதிராக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு பதிவு செய்யுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

அரச திணைக்கள ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரை பாவித்து சிலர் லஞ்சம் வாங்குகின்றார்கள். அவ்வாறு அரச நியமனத்தினை பெற்றுக் கொள்வதற்கு எவருக்கும் காசு கொடுக்கத் தேவையில்லை. அவ்வாறு எவராவது பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டிருந்தால், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்வதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகர்களுடன் தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

தகவல் தெரிவிக்கும் பட்சத்தில் அரச நியமனங்கள் பெற்றுக்கொடுப்பதாக கூறி காசு வாங்குபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்றும் அவர் கூறினார்.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெயரை பாவித்து லஞ்சம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையினை தடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றதாக அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்தி

வட மாகாண ஊழியர்கள் 150 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு

Related Posts