Ad Widget

இலங்கை நிப்போன் கல்வி, கலாசார நிலையத்தினால் 41 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு

இலங்கை நிப்போன் கல்வி, கலாசார நிலையத்தினால் 41 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்றுக யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.சுமார் 5000ரூபா பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

இந்நிறுவனத்தினால், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களில் இருந்து மாணவர்களை தெரிவு செய்து அவர்களின் கல்வி நிலையினை அடிப்படையாக கொண்டு கற்றல் உபகரணங்கள் மற்றும் வங்கி பண வைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிறுவனம் வங்கி பண வைப்புக்களில் மாதாந்தம் 700 ரூபா பணம் வைப்பிலிடப்படுகின்றது. தரம் 9 முதல் உயர்தரம் வரையில் கல்விக் கற்கும் மாணவர்களுக்கு கல்விக்கான உதவிகளை வழங்கப்படுகின்றன.

யப்பான் அரசாங்கத்தினால் நிப்போன் கல்வி, கலாசார நிலையம் நிறுவப்பட்டு 27 வருடங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடாலை மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிறுவனத்தின் தலைவர் கே.கோனேஷ் தலைமையில் மீகாஹத்தென்ன சந்திரசிறி நாயக்க தேரர் நெறிப்படுத்தலில் இன்று இவ் உபகரங்கள் கையளிக்கப்பட்டன.

இந்நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க, 512 படைப் பிரிவின் மேஜர் பலலேகல, 51ஆவது படைப்பிரிவின் கொமான்டர் குணவர்த்தன, 511 படைப்பரிவின் பொதுமக்கள் தொடர்பு காரியாலயத்தின் பிரதம இணைப்பாளர் பிரியந்த உட்பட இராணுவ அதிகாரிகள் மற்றும் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Related Posts