Ad Widget

இலங்கை கடற்படை தளபதிக்கு இந்திய கடற்படையின் வீர விருது

இலங்கை கடற்படை தலைமைத் தளபதி ஜெயந்த பெரேராவுக்கு இந்திய கடற்படையின் வீர விருது, நேற்று திங்கட்கிழமை (27) வழங்கப்பட்டது. டெல்லியின் சவுத் புளொக்கில் நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது.

sri-lankan-navy-chief-receives-guard-of-honour

இந்திய கடற்படையின் வீர விருது, இலங்கை கடற்படைத் தளபதிக்கு வழங்கப்படுவதற்கு ம.தி.மு.க, நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு தமிழக கட்சிகள் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தன.

ஆனால், சீனா, இந்து மகா சமுத்திரத்தில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தடுக்கும் முகமாகவே இந்தியா, இலங்கையுடன் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்தி வருகிறது எனக் கூறப்பட்டது.

எனவே, இலங்கை கடற்படை தளபதியை இந்தியாவிற்குள் அனுமதிக்கக் கூடாது என தமிழகக் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐந்து நாள் சுற்றுப் பயணமாக கடந்த வாரம் இந்தியா சென்ற ஜெயந்த் பெரேரா, நேற்று டெல்லியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு இந்திய கடற்படையின் வீர விருதைப் பெற்றுக் கொண்டார்.

மேலும், அப்போது அவர் இந்திய கடற்படைத் தளபதி ஆர்.கே.தோவனை சந்தித்துப் பேசினார்.

இந்நிகழ்ச்சியின்போது, செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை தளபதி, இலங்கை கடற்பகுதியில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீடுகள் முற்றிலும் வர்த்தக நோக்கத்தில் அமைந்தவைதான். மாறாக எந்த ஒரு நாட்டின் பாதுகாப்புக்கும், குறிப்பாக இந்தியாவுக்கு எதிரானதல்ல என்றார்.

இது குறித்து தோவன் கூறுகையில், ‘இந்தச் சந்திப்பின் மூலம் இந்தியா – இலங்கை உறவு மேலும் பலப்படும் எனத் தெரிவித்தார்.

Related Posts