Ad Widget

இலங்கை அகதிகள் தரையிறங்குவதற்கு தற்காலிக அனுமதி!

இந்தோனேஷிய அச்சே பகுதியில் நிர்கதியாகியுள்ள 44 இலங்கை அகதிகளையும் தற்காலிகமாக தரையிறங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

tamil-refugees-boat-2

இன்று காலை இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், படகில் உள்ள அகதிகளுக்கு உணவு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அச்சே பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பழுதடைந்துள்ள படகை திருத்துவதற்கும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அச்சே பிராந்திய ஆளுநர் சைனி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த படகினை சர்வதேச கடற்பரப்பிற்குள் கொண்டு சென்று விடுவதற்கு முன்னர் படகுக்கு தேவையான எரிபொருள் நிரப்பு பணிகளை மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்தோனேஷிய கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் படகிலுள்ள அகதிகள் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரகம் மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு ஆகியவற்றின் நடவடிக்கைகளுக்காக தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இதன்படி, தற்போது இந்தோனேஷியாவில் சுமார் 13 ஆயிரம் அகதிகள் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts