Ad Widget

இலங்கையில் தமிழர்களுக்கு ஆபத்து!

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்கள், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் ஆபத்தில் உள்ளனர் என பேராசிரியர் போல் நியுமன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை பேரவை அமர்வில் நேற்று (புதன்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட பலர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், பலர் எவ்வித வழக்குப் பதிவும் செய்யப்படாமல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் போல் நியுமன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென்ற விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ஐ.நா பிரேரணையில் குறிப்பிடப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் போதிய செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதோடு, வெளிப்படுத்தப்படாத சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டோர் குறித்த தவல்களையும் பகிரங்கப்படுத்த வேண்டுமென பேராசிரியர் போல் நியுமன் வலியுறுத்தியுள்ளார்.

Related Posts