Ad Widget

இலங்கையில் இந்த வருட இறுதியில் பாரிய பேரழிவு!

இந்த வருட இறுதியில் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பாரிய இயற்கை அழிவுகள் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

வருட இறுதிப் பகுதியில் பாரிய இயற்கைப் பேரழிவு ஒன்று ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக உலக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

12

எல்னினோ என்ற கடுமையான புயற்காற்றின் சீற்றம் இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளை பாதிக்கும் எனக் குறிப்பிடப்படுகிறது.

புயல் காற்றினால் ஆசிய கண்டத்தின் இலங்கை, இந்தோனேசியா, இந்தியா போன்ற நாடுகளின் வெப்பநிலை உயர்ந்து பாரியளவில் வரட்சி ஏற்படக் கூடும்.

தென் அமெரிக்க நாடுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடும்.

காலநிலை சீர்கேட்டின் பாதிப்புக்கள் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அடுத்தாண்டின் செப்டம்பர் மாதம் வரையில் நீடிக்கும்.

இயற்கை அனர்த்தம் காரணமாக சிறிலங்கா போன்ற நாடுகளின் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts