Ad Widget

இலங்கையின் சனத்தொகை 20.4 மில்லியன்

கடந்த 2012ஆம் ஆண்டு நடத்தப்பட்ட குடிசன கணக்கெடுப்பின் போது இலங்கையின் சனத்தொகை 20.4 மில்லியன் என கண்டறியப்பட்டுள்ளது என தொகை மதிப்பீட்டு புள்ளிவிபர திணைக்கள பணிப்பாளர் நாயகம் டி.பீ. குணவர்தன தெரிவித்தார்.

நேற்று கொழும்பு சினமன்ட் கிராண்ட் ஹோட்டலில் நடத்தப்பட்ட குடிசன வீட்டுவசதிகள் 2012 பிரதான தேடல்களுக்கான கருத்தரங்கின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் முதலாவது குடிசன மதிப்பீடு 1871ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அதற்கமைய இது இலங்கையில் நடத்தப்பட்ட 14ஆவது குடித்தொகை மதிப்பீடு ஆகும்.

24 வருடங்களின் பின்னர் முழு நாட்டிலும் நடத்தப்பட்ட குடித்தொகை மதிப்பீடு இதுவாகும்.

Related Posts