Ad Widget

இலங்கையர்களுக்கு சமயப் பற்று அதிகம்

உலகில் உள்ள நாடுகளிலே இலங்கை மக்கள், அதிகளவில் சமயப் பற்றுள்ளவர்கள் என, ஓர் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

ஒரு கணக்கெடுப்பின் நிமித்தம், இலங்கை மக்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 99 சதவீதமான மக்கள், தாம் சமயப் பற்றுள்ளவர்கள் எனத் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, உலகிலுள்ள நாடுகளில் கூடுதலான சமய உணர்வுள்ள நாடுகளுள் ஒன்றாக இலங்கை உள்ளதாக,டெலிகிராப் யூகே, பத்திரிகை தெரிவித்துள்ளது.

அந்தப் பத்திரிகை, 2008ஆம், 2009ஆம் மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் திரட்டிய ஆய்வுகளின் முடிவை வெளியிட்டுள்ளது. அதிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாட்டின் மக்களிடமும் ‘நீங்கள் சமய உணர்வுள்ளவர்களாக இருக்கின்றீர்களா?’ எனக் குறித்த ஆய்வின்போது கேட்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயே இவ்வாய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுக்கமைய, இலங்கை, எத்தியோப்பியா, மாலாவி, நைகர் மற்றும் யேமன் ஆகிய ஐந்து நாடுகள், இந்தப் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துகொண்டுள்ளன.

இந்த நாட்டு மக்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, 99 சதவீதமானவர்களின் பதில் ‘ஆம்’ என்றே வந்துள்ளது. ஐரோப்பியாவில் இத்தாலியர்கள் 74 சதவீதமும் கிரோக்கர்கள் 71 சதவீதமும், சமயப் பற்றுள்ளவர்களாகக் கூறியுள்ளனர்.

போலாந்து மக்கள், ஐரோப்பியாவில் ஆகக் கூடியளவில் அதாவது 86 சதவீதமானோர் சமயப் பற்றுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.

பிரித்தானியாவில் 10 பேரில் மூவர் மட்டுமே சமயப் பற்றுள்ளவர்களெனக் கூறியுள்ளனர். அமெரிக்காவில் 56 சதவீதமான மக்கள் சமயப் பற்றுள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.

ஆகவும் குறைந்தளவு கடவுள் நம்பிக்கை காணப்படும் நாடாக சீனா காணப்படுகிறது. இங்கு 7 சதவீதமான மக்கள் மட்டுமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாகக் காணப்படுகின்றனர்.

அத்துடன், ஜப்பான், எஸ்தோனியா, நோர்வே, சுவீடன் மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளிலும் கடவுள்ள நம்பிக்கை குறைவாகக் காணப்படுவதாக குறித்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Posts