Ad Widget

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் சம்பந்தன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் இரா. சம்பந்தன் ஏக மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 14 ஆவது தேசிய மாநாடு நேற்றுக் காலை 9.45 மணிக்கு மட்டக்களப்பு அமெரிக்கமிஷன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கட்சியின் வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பு கிளைகளின் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது. இதில் இரா. சம்பந்தன் மீண்டும் தலைவராகவும், சிரேஷ்ட துணைத் தலைவர்களாக பேராசிரியர் சி.க.சிற்றம்பலம், பொன். செல்வராஜா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

பொதுச் செயலாளராக மாவை. சேனாதிராஜாவும், துணைப் பொதுச் செயலாளராக பி.துரைராஜசிங்கமும், உப தலைவர்களாக பி.என்.சூசைதாசனும், கே.துரைரட்ண சிங்கமும், இ.சோமசுந்தரமும், டேவிற் நாகநாதனும், ஆர்.எம்.இமாமும் தெரிவு செய்யப்பட்டனர்.

இணைப் பொருளாளராக எஸ்.ரி.தியாகராஜாவும், பெ.கனகசபாதியும் தெரிவு செய்யப்பட்ட அதே வேளை 14 துறைகளுக்குமான உப செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அவர்களில் உள்ளூராட்சி சி.வி.கே. சிவஞானம், தொழிற்சங்கம் பா.அரியநேத்திரன் (நாடாளுமன்ற உறுப்பினர்), கொள்கை பரப்பு சி.சிறிதரன் (நாடாளுமன்ற உறுப்பினர்), மீள் குடியேற்றம் ஈ.சரவணபவன் (நாடாளுமன்ற உறுப்பினர்), சட்டம் மற்றும் வெளிவிவகாரம் எம்.ஏ.சுமந்திரன், தகவல் ஊடகம், தொழில்நுட்பம் என்.வித்தியாதரன், மாதர் அணி திருமதி அன்னம்மா சவுந்தரராஜன் (கிழக்கு மாகாணம்) திருமதி நாச்சியார் செல்வநாயகம் (வடமாகாணம்), சமூக மேம்பாடு க.பரஞ்சோதி, விவசாயம் க.பரமேஸ்வரன், கடல்வளம் ம.அன்ரனி ஜெயநாதன், நிர்வாகம் எப்.எக்ஸ்.குலநாயகம், இளைஞர் அணி க.சிவகரன் இவர்களுடன் 11 பேர் கொண்ட செயற்குழுவும் தெரிவு செய்யப்பட்டது.

Related Posts