Ad Widget

இலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ; சுனாமி அச்சுறுத்தல் இல்லை !

இலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையெனவும் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லையெனவும் அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

குறித்த நில நடுக்கம் இலங்கைக்கு தென் கிழக்காக இந்து சமுத்திரத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 5.4 ரிச்டர் அளவில் இன்று 12 ஆம் திகதி புதன்கிமை அதிகாலை 2.34 மணிக்கு பதிவாகியுள்ளது.

இதேவேளை, குறுத்த நில நடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித ஆபத்தும் இல்லையெனவும் இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாதி முன்னெச்சரிக்கை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts